ஸ்டார்ட்அப் முயற்சிகளுக்கு YOURSTORY தளம் எந்த அளவிற்கு உறுதுணையாக இருக்கிறது, அதை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஒரு கருத்தரங்கு மதுரையில் VBOOM அலுவலகத்தில் நடந்தது. இதை MaduraiStartups தனது தொடர்முயற்சியால் ஒருங்கிணைப்பால் சாத்தியமாக்கியது. Yourstory பெங்களூர் அலுவலகத்தில் இருந்து திரு.தமிழ் Video Conference மூலம் தொடர்புகொண்டு தனது கருத்தை எடுத்துவைத்தார்.
ஒரு தொழில்முனைவோருக்கு மீடியா வெளிச்சம் ஏன் தேவை, எவ்வளவு பயன் உள்ளதாக இருக்கும். அதை yourstory எவ்வளவு எளிமையாக தருகிறது என்று விவாதிக்கப்பட்டது
ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவானால் மட்டும் போதாது தன்னை வெளிப்படுத்தியே ஆகவேண்டும். அப்போது தான் அதன் சேவை அதன் பயனர்களின் கவனத்திற்கு வரும், அதே போல அந்த நிறுவனத்துடன் ஒத்திசைவான நிறுவனங்கள் கூட்டு சேரவும், முதலீட்டாளர்களை ஈர்க்கவும் முடியும். அவ்வாறு வெளிப்படுத்த சமூக வலைத்தளங்கள் மட்டும் போதாது அதனுடன் பத்திரிகை வெளிச்சமும் வேண்டும். அதை Yourstory என்ற தொழில்முனைவோருக்கான இணைய பத்திரிகை மிகவும் எளிமை படுத்தி தருகிறது. இவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமல்லாது இந்தியவின் 12 பிராந்திய மொழிகளில் தருகிறார்கள். இது இன்னும் பல பேரை சேர எளிதாக்குகிறது. இதுவரை இவர்கள் 50000 க்கும் அதிகமான ஸ்டார்ட்அப் நிறுவனங்களை பற்றி நேர்காணல்கள், கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறார்கள். இப்போது அந்த நிறுவனங்களே தங்களின் பெயரில் ஒரு profile தொடங்கி தங்களை பற்றி எழுதி வெளியிட வகை செய்கிறது. சிறந்த கட்டுரைகள் தளத்தின் முன்பக்கத்தில் வெளியிடப்பட்டு பரவலான கவனஈர்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது
மதுரை போன்ற மாநகரங்களில் அதிகம் கவனம் பெறாத ஆனால் அருமையான பல நிறுவனங்களை, கண்டுபிடிப்புகளை, தொழில் முயற்சிகளை இவர்கள் கட்டுரையாக நேர்காணலாக கொண்டு வந்திருக்கிறார்கள். இது வெறும் கணினி , இணைய தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்புகளை மட்டுமல்ல சிறு குறு கண்டுபிடிப்புகளையும் கூட கவனத்தில் கொள்கிறார்கள். இது ஒரு அருமையான தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைத்து தொழில்முனைவோர்களையும் இது வெகுவாக ஈர்த்தது. மேலும் அவர்கள் கருத்தரங்கின் வாயிலாக தங்களின் சேவை குறித்தும் எதிர்பார்ப்பு குறித்தும் வெளிப்படுத்த , அதற்கு ஒத்திசைவான நண்பர்கள் உதவிக்கரம் நீட்ட என்று மிகவும் பயனுள்ளதாக அமைந்தது இன்னும் சிறப்பு. இது போன்ற தொடர் கருத்தரங்குகள் நடக்க வேண்டும் என்று நண்பர்கள் கேட்டுக்கொண்டார்கள்
.